×

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு பசு மாடுகள் பலி: முதுகுளத்தூரில் பரிதாபம்

சாயல்குடி: முதுகுளத்தூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் நான்கு பசு மாடுகள் பரிதாபமாக பலியாயின. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமி. இவர் நான்கு பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முதுகுளத்தூர் கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாடுகளை லெட்சுமி அழைத்து சென்றார். அப்போது கண்மாயில்  உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் சென்ற நான்கு பசு மாடுகளும் மின்கம்பியில் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. லெட்சுமி கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார் உடனடியாக மின்வாரியம், தீயணைப்பு மீட்புக்குழு, கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்த மாடுகளை கால்நடை மருத்துவர் உடற்கூறு அறுவை சிகிச்சை செய்தார்.லெட்சுமி கூறுகையில், ‘‘எனது கணவர் குணசேகரன் இறந்து விட்டார். பசுமாடுகளை வைத்து அதன் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தேன். கண்மாய் போன்ற நீர்நிலை பகுதிகளில் மின்கம்பியை முறையாக பராமரிக்காத மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால், சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நான்கு பசுமாடுகளை பறிகொடுத்துள்ளேன். எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மின்விபத்துக்கு இழப்பீடு வழங்குவது வழக்கம் தான். இறந்த பசு மாடுகளின் உடற்கூறு அறுவை சிகிச்சை அறிக்கை வந்ததும், உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரை செய்யப்படும்’’ என்றார்….

The post அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு பசு மாடுகள் பலி: முதுகுளத்தூரில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Mudukulathur ,Chayalgudi ,Ramanathapuram District ,Mudhukulathur Ayyanar Temple ,Mudhukulathur ,
× RELATED நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை...