×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் (வரும் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் (வரும் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் : கைதான சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்

டெல்லி உயர்நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐகோர்ட் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டத்தை தொடர்ந்து, ப.சிதம்பரத்தின் வீட்டு சுவர் ஏறி குதித்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


இந்நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரிய மனு, இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த மனு காலவதி ஆகிவிட்டது என்று கூறி   உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு ப. சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நாளை மதியம் 12 மணிவரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் 5 நாட்கள் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை


இந்நிலையில் சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை, விசாரணையை முடித்துக் கொண்டு மீண்டும் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும், சிபிஐ விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு ப.சிதம்பரம் வழங்காததால், அவரை தொடர்ந்து மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  அதேநேரத்தில், நீதிமன்றம் சிபிஐ காவல் வழங்காவிட்டால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

சிபிஐ : மேலும் 5 நாட்கள் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை.

நீதிபதி: 5 நாள் காவலில் இருக்கும்போது என்ன விசாரணை நடத்தப்பட்டது? இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரத்தை சிபிஐ தெளிவாக விளக்க வேண்டும்.

சிபிஐ : மின்னஞ்சல் பரிமாற்றங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆதாரங்களாக கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணை சம்பந்தமாக சில ஆதாரங்களை தந்துள்ளன.

சிபிஐ : ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வெளிநாடு வங்கிக்கணக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கும்.

சிபிஐ : சில ஆவணங்கள் பரிமாற்றம் குறித்து சிதம்பரத்திடம் மேலும் விசாரிக்க வேண்டி உள்ளது.

கபில் சிபல் : ஏதோ சில துண்டு சீட்டுகளை காட்டிவிட்டு ஆதாரங்கள் என்கிறார்கள். உண்மையான ஆதாரங்கள் இருந்தால் காட்டலாமே.

கபில் சிபல் : எந்த ஆவணமும் இல்லாமல் ப. சிதம்பரத்திடம் மேலும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோருவது எப்படி ?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐயின் மனு மீதான உத்தரவு 20 நிமிடத்தில் பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

நீதிபதி : ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் (வரும் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவு


Tags : INX, Media, Abuse, PC Chidambaram, Arrest, Pre-Bail, Delhi Court
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்