இங்கிலாந்துக்கு 359 ரன் இலக்கு

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 359 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா179 ரன் எடுத்த நிலையில், இங்கிலாந்து 67 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 112 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 246 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. லாபஸ்ஷேன் 80, வேடு 33, ஹெட் 25, கவாஜா 23, பேட்டின்சன் 20, ஹாரிஸ் 19 ரன் எடுத்தனர்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர், பிராடு தலா 2, வோக்ஸ், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Tags : 359-run ,target, England
× RELATED பரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன் இலக்கு