இலக்கை தாண்டி 1.5 கோடி பேர் அதிகம் பாஜ.வில் 3.78 கோடி புதிய உறுப்பினர்கள்

புதுடெல்லி: பாஜ.வில் 3.78 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகம். பாஜ,வின் தாய்கட்சியான பாரதிய ஜனசங்கத்தின் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை கடந்த ஜூலை 6ம் தேதி பாஜ உறுப்பினர் சேர்க்கைக்கான முகாமை வாரணாசியில் பிரதமர் மோடிதொடங்கி வைத்தார். ஏற்கனவே, இக்கட்சிக்கு 11 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் 20 சதவீதமான 2.2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவரும், உறுப்பினர் சேர்க்கை முகாமின் துணை ஒருங்கிணைப்பாளருமான துஷ்யந்த் குமார் கவுதம் கூறுகையில், இந்த முகாமில் உபி.யில் 65 லட்சம், மேற்கு வங்கத்தில் 36 லட்சம், குஜராத்தில் 34 லட்சம், டெல்லியில் 15 லட்சம் உள்பட இதுவரை 3 கோடியே 78 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : BJP, New Members
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...