×

மத்திய அரசின் பயிற்சி மைய பெயர் பலகையில் தமிழ் தவிர்ப்பு: தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையால் சர்ச்சை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொழிற்கல்வி, பொறியியல் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 1968-ம் ஆண்டு முதல் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் மத்திய அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர். இந்த மத்திய அரசின் பயிலகத்தின் முகப்பு பெயர் பலகையில் தமிழ் மொழி மட்டும் இடம்பெறவில்லை. தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையில் NATIONAL SKILL TRAINING INSTITUTE என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே பெயர் பலகை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மாநில மொழியான தமிழில் பெயர் பலகையில் இடம்பெற வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் மத்திய அரசின் இந்த கல்வி நிறுவனத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …

The post மத்திய அரசின் பயிற்சி மைய பெயர் பலகையில் தமிழ் தவிர்ப்பு: தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பலகையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : National Skill Training Institute ,Chennai ,Guindy ,central government training center ,Dinakaran ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி