×

நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-யை கொண்டு சென்ற இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-யை கொண்டு சென்ற இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அது சென்றடைந்தது. சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் இன்று புவி வட்ட பாதையை விட்டு வெளியேறிய சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் வட்டப்பாதையை சுற்றத்தொடங்கியுள்ளது.

இதனிடையே நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-யை கொண்டு சென்ற இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவுக்கான பயணத்தில் மிக முக்கியமான சாதனை என இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : Chandrayan, ISRO, PM Modi, congratulations
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...