×

ஆகஸ்ட் 31ல் அசாமிற்கான குடியுரிமை பதிவேடு வரைவு அறிக்கை வெளியீடு : பல லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படலாம் என சூசகம்

டிஸ்பூர் : அசாமில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேசிய குடியுரிமை பதிவேட்டின் வரைவு அறிக்கை இந்த மாதம் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால் வன்முறைகள் ஏற்படாத வண்ணம் தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்ட உள்ளனர். அசாமில் சட்டத்திற்கு புறம்பாக பலர் குடியேறி உள்ளனர் என்பது மத்திய அரசின் குற்றச் சாட்டாக உள்ளது. அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்து கடந்த ஆண்டு 40 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டது பெரும் எதிர்ப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையின் அசாமின் குடிமக்கள் யார் என்பதை உறுதி செய்வதற்கான வரைவு அறிக்கை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்ட உள்ளனர். 1971ம் ஆண்டு வங்காள தேசம் தனி நாடாக உருவாகியபோது, பல லட்சம் பேர் அசாமுக்குள் நுழைந்தார்கள் எனபது குற்றச் சாட்டாகும். எனவே 1971ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்களை வைத்து இருப்போர் மட்டுமே அசாமின் குடிமக்களாக கருதப்படுவர். இது குறித்து அவசர சட்டமும் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Citizenship Record, Draft, Report, Publication, Assam
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...