×

புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் 2

ஸ்ரீஹரிகோட்டா: புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்றத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். திரவ என்ஜினை இயக்கி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திராயன்-2வை இஸ்ரோ கொண்டு சென்றுள்ளது. மேலும் நாளை மற்றும் ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 விண்கலத்தின் திசை  மாற்றப்படும் என்றும், 4 முறை மாற்றிய பிறகு 100 கி.மீ. தூரத்தில் கடைசி சுற்றுப்பாதையை சந்திராயன் 2 அடையும் என்று தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 2வில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும் என்றும், பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 2 முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் தனது ஆய்வை தொடங்கும் என்று தெரிவித்தனர்.

சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அது சென்றடைந்தது. சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் இன்று புவி வட்ட பாதையை விட்டு வெளியேறிசந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் வட்டப்பாதையை சுற்றத்தொடங்கியுள்ளது.

Tags : Chandrayaan 2, India, ISRO, Scientists, Moon orbit, Chandrayaan 2 spacecraft, Earth orbit, Sriharikota
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...