×

மனித உரிமை ஆணையத்தில் துணை கமிஷனர் மீது புகார்

காசிமேடு: சென்னை காசிமேடு காசிபுரத்தில் 556 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், காசிபுரம் ‘’ஏ’’ பிளாக்கில், குடிசை மாற்று வாரிய ஒதுக்கீடு ஆணை இல்லாமல், வசித்து வந்த 65 குடும்பத்தினரை கடந்த 17ம் தேதி,  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றினர். அப்போது ‘’ஏ’’ பிளாக்கில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பொதுமக்கள் தரப்பு நியாயத்தை கூற முற்பட்டார். அப்போது,  அங்கிருந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அவரை பேச அனுமதி மறுத்ததோடு, பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக தெரிகிறது.

மேலும், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன், வழக்கறிஞர் ஜெயச்சந்திரனை, போலீஸ் வாகனம் அருகிலேயே நிறுத்தி வைத்ததார். இந்நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் தன்னை இழிவாக பேசிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்  சுப்புலட்சுமி, ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் மீது, மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



Tags : Human Rights Commission, Deputy Commissioner, Complaint
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...