×

அமர்நாத் யாத்திரை நிறைவு: 3.39 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஸ்ரீநகர்: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. காஷ்மீரில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர்.  இந்த ஆண்டுக்கான 46 நாட்கள் யாத்திரை, கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக கடந்த 31ம் தேதி அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. 3 நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதால், பக்தர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது.

பின்னர், கடந்த 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் யாத்திரை தொடங்கவில்லை. யாத்திரை நிறுத்தப்பட்டபோது 3.39 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில், ஷ்ராவன் பூர்ணிமா நாளான நேற்றுடன் அமர்நாத் யாத்திரை நிறைவடைந்தது. இதற்காக சிறப்பு பூஜைகள் மற்றும் சரி முபாரக் எனப்படும் சிறப்பு சடங்கு செய்வதற்காக 20 அர்ச்சகர்கள் கொண்ட குழு நேற்று ஹெலிகாப்டரில் அமர்நாத் குகை கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அமர்நாத் யாத்திரை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Tags : Amarnath Yatra, completed, 3.39 lakh devotees, Panilinga darshan
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...