×

வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : வீழ்ச்சியை நோக்கி செல்லும் ஆட்டோமொபைல் துறையை  உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு : ஆட்டோமொபைல் உள்ளிட்ட மற்ற துறைகளிலிருந்து வரும் தகவல்கள் அனைத்தும்  நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவிப்பதை காட்டுகிறது. மத்திய இதற்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை மீட்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  


Tags : MK Stalin,warns, central government ,automobile industry , fall
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...