×

ரஜினியை நேரில் பார்க்க சென்ற ரசிகரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்

சென்னை: வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகணபதி (35), மேன்பவர் ஏஜென்சி நடத்தி வருகிறார். தீவிர ரஜினி ரசிகர். இவர், தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து அலுவலகம் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘நடிகர் ரஜினிகாந்த் கலைவாணர் அரங்கத்திற்கு வர உள்ளார். நாங்கள் செல்கிறோம். நீயும் வா,’’ என அழைத்துள்ளார். ரஜினியை பார்க்கும் ஆர்வத்தில் நண்பர்களுடன் பாலகணபதி கலைவாணர் அரங்கம் சென்றார்.

அங்கு, விஐபி நுழைவாயில் அருகில், நடிகர் ரஜினிகாந்த் வருவதை கண்ட பாலகணபதி, கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், தனது செல்போனில் ஆர்வமாக படம் பிடித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த ₹40 ஆயிரம் காணாமல் போனதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : 40,000 Abs , fan , see Rajini, person
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...