×

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு திசையில் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai, Weather Center, Rain
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...