×

ஊட்டியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி நீலகிரியில் மழை பாதிப்புகளை சீரமைக்க 200 கோடி தேவை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு சீரமைக்க 200  கோடி ேதவைப்படுகிறது. கூடுதல் நிதி பெற மத்திய அரசிடம் கோரிக்கை  வைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஊட்டி வந்தார். அங்குள்ள தமிழகம் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்ட அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ெசய்தியாளர்களிடம் கூறியதாவது:நீலகிரியில் பெய்த கன மழையின் காரணமாக 500 ஏக்கர் நிலம்  பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நிலங்கள் மறு சீரமைப்பிற்கு  தோட்டக்கலைத்துறைக்கு ₹4 கோடியே 37 லட்சம் தேவைப்படும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அதேபோல்,  மாநில நெடுஞ்சாைலத்துறையை பொறுத்தவரை 852  கி.மீ., தூரம் கொண்ட சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க ₹10.5  கோடி தேவை. மின் வாரியத்திதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய  ₹23 கோடி தேவைப்படுகிறது.  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில்,  கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க ₹39.6 கோடி  தேவைப்படுகிறது. பேரூராட்சிகளுக்கு ₹28.30 லட்சம் மறு சீரமைப்பிற்கு  தேவை. மாவட்டத்தில் மழை சேதங்களை சீரமைக்க  மொத்தமாக ₹200 கோடி தேவைப்படுகிறது.  இந்த நிதியை உடனடியாக மாநில பேரிடர் நிதியில் இருந்து விடுக்க நடவடிக்கை  எடுக்கப்படும். கூடுதல் நிதி பெற மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்படும், என்றார்.



Tags : O. Panneerselvam ,Ooty,Nilgiris,revamp
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...