×

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்

சென்னை: ஆயுள் கைதியாக உள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு வழுக்கு தொடர்ந்திருந்தார். நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு வழங்கிய பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக ஐகோர்ட்டில் அரசு பதிலளித்தது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து தண்டனையை குறைக்கும் மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது என அரசு ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு நளினி மனு மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Tags : Advance Release, Nalini, Case, Discount, Tamil Nadu Government, Respondent
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்