×

நீலகிரி வெள்ள பாதிப்புகள் - துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி:  நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர்  ஓ.பன்னிர் செல்வம்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியாளர் இன்னொசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளத்தால்  ஏற்பட்ட பாதிப்புகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய ஓ.பன்னிர் செல்வம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு  மக்களுக்கு தேவையானவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அரசை குறைக்கூறி வருவதாக  துணை முதலமைச்சர்  ஓ.பன்னிர் செல்வம் கூறினார்.


Tags : Nilgiris, flood victims, OPS, led, consultation meeting
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...