×

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!

டெல்லி:  காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்,  அதேபோல் லடாக் பகுதியை ேபரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் குறிப்பிடுவன; ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சூழலை ஆராய குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.


Tags : Kashmir, petition, Supreme Court
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...