×

பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு ஜெயலலிதா வருத்தப்பட்டார்: மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு ஜெயலலிதா வருத்தப்பட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கையை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று  முன்தினம்  பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அஞ்சலகங்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிற நிறைவுப் பொதுக்கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நேற்று முன்தினம்  நடந்தது.

கூட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் பகுதி குழு உறுப்பினர் அழகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர், நகர செயலாளர் கோவிந்தன், பகுதி செயலாளர் குமார், மாநில குழு உறுப்பினர் பிரமிளா முன்னிலை வகித்தனர். இதில்  சிறப்பாளராக கலந்துகொண்ட கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘‘ஜெயலலிதா உயிரோடு இருந்த போது சென்னை மெரினாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நான்  பிஜேபியுடன் கூட்டணி வைத்தது என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு. இனி வருங்காலங்களில் பிஜேபியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்’’ என்று உறுதிபட கூறினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரின் கொள்கைகளை  எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை என்றார்.

Tags : Jayalalithaa,alliance , Baja,Balakrishnan
× RELATED ஜெயங்கொண்டம் அருகே தான் உயிருடன்...