- கோப்பம்-விலாயூர் ஊராட்சி
- பாலக்காடு
- கேரள நீர் வளம்
- பாசனம்
- அமைச்சர்
- Krishnankutty
- கோபம்-விலாயூர் பஞ்சாயத்துகள்
- பட்டம்பி
- தின மலர்
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த கொப்பம்-விளயூர் ஊராட்சிகளில் சமத்துவக் குடிநீர் முதற்கட்டத் திட்டத்தை கேரள நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த கொப்பம்-விளயூர் ஊராட்சிகளில் சமத்துவக்குடிநீர் முதற்கட்டத் திட்டத்தை கேரள நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். விளயூர் மைலாடிபரம்பு குடிநீர்வடிக்கால் வாரியத்தின் சுத்திக்கரிப்பு ஆலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., முகமது முக்ஷின் தலைமை வகித்தார். கேரள குடிநீர் வாரியத்தின் உறுப்பினரும், சித்தூர் பிளாக் பஞ்சாயத்து தலைவருமான வக்கீல் முருகதாஸ், பட்டாம்பி பிளாக் பஞ்சாயத்து தலைவர் ஷஜிதா வினோத், விளயூர் ஊராட்சி தலைவர் பேபிகிரிஜா, கொப்பம் ஊராட்சி தலைவர் உன்னிகிருஷ்ணன், பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஷாபீதா உட்பட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் சுத்திக்கரிப்பு ஆலை, 32 லட்சம் கொள்ளளவுக்கொண்ட குடிநீர் தொட்டி, 21 கி.மீ., குடிநீர் விநியோக குழாய் ஆகியவற்றின் செயல்பாடுகளை கேரள நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினால் கொப்பம்-விளயூர், பட்டாம்பி ஆகிய ஊராட்சிகளில் வசிக்கின்ற மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு நிதியுதவியிலிருந்து ரூ.20 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 746 குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என கேரள நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார்….
The post கொப்பம்-விளயூர் ஊராட்சியில் சமத்துவ குடிநீர் திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.