×

முத்தரப்பு தொடர் பைனல் இந்தியா யு-19 அணிக்கு 262 ரன் இலக்கு

லண்டன்: வங்கதேச யு-19 அணியுடனான முத்தரப்பு பைனலில், இந்தியா யு-19 அணிக்கு 262 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இங்கிலாந்தில் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து யு-19 அணிகள் லீக் சுற்றில் மோதின. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த வங்கதேசம் யு-19 அணியும் (11 புள்ளி), இந்தியா யு-19 அணியும் நேற்று  பைனலில் களமிறங்கின. ஹோவே கவுன்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேச யு-19 அணி 50 ஓவரில் 261 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

மகமதுல் ஹசன் ஜாய் 109 ரன் (134 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), பர்வேஸ் உசேன் இமான் 60 ரன் (64 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ஷமின் உசேன் 32, தன்ஸித் ஹசன் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.  இந்தியா யு-19 பந்துவீச்சில் தியாகி, மிஷ்ரா தலா 2, பிஷ்னோய், ஹெக்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 262 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய யு-19 அணி களமிறங்கியது.


Tags : Tripartite ,Final, India, U-19 team
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்