ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் சவுரவ் வர்மா

ஐதராபாத்: ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். கச்சிபவுலி உள்ளரங்கில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சிங்கப்பூரின் லோஹ் கியான் யூவுடன்  நேற்று மோதிய சவுரவ் வர்மா 21-13, 14-21, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 52 நிமிடத்துக்கு நீடித்தது.


Tags : Hyderabad, Open Badminton, Sourav Verma , gold
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...