×

சில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ரூ.20,000 கோடி அபராதம்: சீனா அதிரடி

பீஜிங்: மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சீனாவில் இருந்து களமிறங்கிய ‘அலிபாபா’ நிறுவனம், குறுகிய காலத்தில் இத்துறையில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. சீன அரசு தற்போது தனது நாட்டில் நிதி, சுகாதார சேவைகள் உள்ளிட்ட துறைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இவற்றை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் புயல் வேகத்தில் வளர்ந்து, உலகம் முழுவதும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், சீனாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் நசுக்கி வருகின்றன.இதுபோல், எந்தவொரு தனிப்பட்ட பெரிய தொழில் நிறுவனமும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்களை நசுக்கிவிட்டு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, ‘ஏகபோக தடுப்பு சட்டம்’ என்ற சிறப்பு சட்டத்தை சீன அரசு கொண்டு வந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நிறுவனங்களின் மீது, இந்த சட்டத்தின் கீழ் அது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறது. இதன்படி, மின்னணு வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் குற்றத்துக்காக, அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடியை நேற்று அபராதம் விதித்தது….

The post சில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ரூ.20,000 கோடி அபராதம்: சீனா அதிரடி appeared first on Dinakaran.

Tags : Alibaba ,China ,Beijing ,Amazon ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...