×

துளித்துளியாய்....

* கோஹ்லி இன்னும் 19 ரன் எடுத்தால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் (64 இன்னிங்சில் 1930 ரன்) வசமிருந்து தட்டிப் பறிக்கலாம்.
* ஜார்ஜியாவில் நடந்த பிளிஸி கிராண்ட் பிரீ மல்யுத்த போட்டித் தொடரின் ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
* ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர் முகமது ஷஷாத் ஒப்பந்தத்தை கால வரையின்றி சஸ்பெண்ட் செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* ஐரோப்பிய கால்பந்து சீசனின் சிறந்த கோல் அடித்த வீரர் விருதுக்கு பார்சிலோனா அணி நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : .... trickle
× RELATED காடுவெட்டியில் பதற்றம்; குரு மகன்,...