×

அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம்: விஐபி தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததால் 8 பக்தர்கள் மயக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக காத்திருந்த 8 பக்தர்கள் மயக்கமடைந்துள்ளனர். வி.ஐ.பி தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்த 8 பேர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்த பக்தர்களை மீட்ட மருத்துவர்கள் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் நடைபெறும். அத்திவரதர் வைபவம் தொடங்கி இன்றோடு 41 நாட்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை வழிபட தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ளது.

அதன்படி, அத்தி வரதர் தரிசன நிறைவு நாளான 17-ம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 16ம் தேதி நள்ளிரவோடு தரிசனம் நிறைவு பெரும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தின் வெளிமாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. முன்னதாக, இதே போன்று கூட நெரிசல் அதிகரித்ததன் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கூட்டநெரில் காரணமாகவும், வெகு நேரம் நிற்பதன் காரணமாகவும் மயக்கமடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பாக விஐபி தரிசனத்தில் நின்றவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் 50 பேர் படுகாயமடைந்தனர். நேற்றையதினம், காலை 5 மணிக்கு விஐபி தரிசனத்தில் நின்றவர்கள் நண்பகல் 1 மணி அளவில் தான் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்தும் இன்றைய தினமும் கிட்டதட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாகவே 8 மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Attivaratar, viaipitaricanam, pilgrims, fainting
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...