×

சென்னை திருவெற்றியூரில் மெட்ரோ ரயில் பணியின் போது இரும்பு கம்பி ஒன்று மாநகர பேருந்தில் விழுந்து விபத்து!

சென்னை: சென்னை திருவெற்றியூரில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணியின் போது இரும்பு கம்பி ஒன்று விழுந்ததில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அரசு பேருந்தின் முன் பகுதியின் முழுவதும் நொறுங்கியது. அதிர்ஷடவசமாக பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகள் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாக சிறு நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. சென்னை திருவெற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாக்கத்தில் இருந்து திருவெற்றியூர் சுங்கச்சாவடிக்கு செல்லும் 32ஏ என்ற மாநகர பேருந்து, சுங்கச்சாவடி அருகே பேருந்து நிலையத்திற்கு உள்ளே திரும்பும் சமயத்தில் திடீரென எதிர்பாராத விதமாக மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்று கீழே விழுந்தது.

இரும்பு கம்பி, கீழே இருந்த தடுப்பு வேலி மீது விழுந்தது. அதிக கன எடை கொண்ட இரும்பு கம்பி என்பதால், தடுப்பு வேலியுடன் இரும்பு கம்பியம் சேர்ந்து மாநகர பேருந்தின் மீது சாய்ந்தது. இதன் காரணமாக பேருந்தின் முன் பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது. முன்பக்க கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தது. மேலும், மாநகர பேருந்தின் கடைசி நிறுத்தம் என்பதன் காரணமாக பேருந்தில் குறைவான பயணிகள் மட்டுமே இருந்தனர். இதனால் விபத்தின் போது பயணிகள் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கினர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார். சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால் இது போன்ற விபத்துகளும், போக்குவரத்துக்கு நெரிசல்களும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் பணிகளை முடிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Chennai, Metro Rail, Accident, Municipal Bus
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...