×

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் கால் இறுதியில் பவுஸ்கோவா : ஹாலெப் முன்னேற்றம்

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை மேரி பவுஸ்கோவா தகுதி பெற்றார். கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 3வது சுற்றில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவுடன் மோதிய பவுஸ்கோவா (91வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில்  முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

மற்றொரு 3வது சுற்றில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவாவை எதிர்கொண்ட சிமோனா ஹாலெப் (ரோமானியா) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். கால் இறுதியில் பவுஸ்கோவா - ஹாலெப் மோதுகின்றனர். செரீனா தகுதி: அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தனது 3வது சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவை (ரஷ்யா) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), நவோமி ஒசாகா (ஜப்பான்), சோபியா கெனின் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.



Tags : Poskova , Rogers Cup tennis quarter,
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...