×

2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு : ஜாக் லீச் இடம் பெற்றார்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 251 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசத் தவறிய ஸ்பின்னர் மொயீன் அலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் ஜாக் லீக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓலி ஸ்டோன் காயம் காரணமாக விலகியுள்ள அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் கரனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, ஜாக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

Tags : England squad , 2nd Test,Jack Leach replaced
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...