×

வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக 35 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குந்தா, ஊட்டி, பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக 35 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 155 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது, 1,676 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் அதிகம் ஓடும் இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வெள்ளத்தை பார்க்க வருவது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று கூறியுள்ளார்.  



Tags : Nilgiris, rain, flood, Minister RB Udayakumar
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...