×

போதைப்பொருள் விற்ற தம்பதி உள்பட 5 பேர் கைது : 200 கிலோ மாவா பறிமுதல்

திருவொற்றியூர்: வீட்டில் போதைப்பொருள் பதுக்கி விற்ற தம்பதி உள்பட 5 பே ரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவொற்றியூர் அண்ணா காலனியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குள்ள கடை மற்றும் வீடுகளில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் மாவா எனப்படும் போதைப்பொருள் பதுக்கி விற்பது தெரிந்தது. இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (43), அவரது மனைவி தீபா (36) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து மொத்தமாக மாவா வாங்கி வந்து,  சிறு சிறு பொட்டலங்களாக விற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தண்டையார்பேட்டையில் உள்ள குடோனில் ஆய்வு செய்து, அங்கு மாவா தயாரித்த ஆரோக்கியநாதன் (42), மணிகண்டன் (45), கார்த்திக் (34) ஆகியோரை கைது செய்தனர்.  இவர்களிடம் இருந்து 200 கிலோ மாவா உள்ளிட்ட போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Five kg ,drugs seized, 200 kg , mawa seized
× RELATED கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 210...