×

கொட்டி தீர்த்த கனமழை கடந்த 24மணி நேரத்தில் அவலாஞ்சியில் 82.செ.மீ. மழை பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குந்தா அணை நிரம்பியது. குந்தா அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பைகாரா அணையில் இருந்து மாயாற்றில் நீர் திறந்துவிடப்படுவதால் மசினகுடி, தெங்கு மரஹாடா ஆகிய இடங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை பெய்யாத அளவிற்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82.செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும், இதுகுறித்து ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உறுதிப்படுத்த உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார். கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82.செ.மீ. மழையும், மேல்பவானியில் 30.செ.மீ., கூடலூர் 24.செ.மீ, சின்னக்கல்லார் 23.செ.மீ, வால்பாறை 20.செ.மீ ,  தேனீ மாவட்டம் பெரியாரில் 18.செ.மீ , நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 11.செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் கீழ்ப்பாதையில் 9.செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில்,  மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24மணி நேரத்திற்கு, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்  என்றும் அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.


Tags : Nilgiris, heavy rains, floods, 82.cm
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...