×

டிராவிட்டிற்கு பிசிசிஐ நோட்டீஸ்: கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று கங்குலி கருத்து..!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.பிசிசிஐ-யின் நன்நெறி அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே ஜெயின் லாபம் தரும் இரண்டு பதவிகளை வகிப்பது தொடர்பாக டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய டி.கே ஜெயின், `கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அவரது பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதற்கு முன்பாக வி.வி.எஸ். லட்சுமண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மீது இதுபோன்ற ஆதாயம் தரும் இரட்டைப் பதவி குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது இருவரும் விளக்கம் அளித்தனர். மேலும், ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக கருதினால் கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார் என சச்சினும், லட்சுமணனும் கூறினர். கங்குலிக்கும் இதேபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது; பின்னர் அவர் விளக்கம் அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,`இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்... இந்த `ஆதாய முரண்’... செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி இரட்டை ஆதாயப் புகார் விவகாரத்தில் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் எனத் தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் ராகுல் டிராவிட் வரும் 16-ம் தேதி பிசிசிஐ-க்கு விளக்கம் அளிக்க உள்ளார் என கூறப்படுகிறது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது டிராவிட்டின் விளக்கத்துக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.

Tags : Dravid, Notice, God, Indian Cricket, Ganguly
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு