×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றுடன் இலவச தரிசனம் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக நேற்று வரை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. நேற்றைய தினம் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று காலை முதல் தரிசித்து வருகின்றனர். அதேவேளையில் இன்று முதல் கவுன்டர்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் இலவச தரிசன கிடையாது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 49 ஆயிரத்து 751 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹1.91 ேகாடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  சுந்தரகாண்ட பாராயணம் கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் சில நாட்கள் மூடப்பட்டது. தற்போது கொரோனா 2வது அலையாக பரவி வருகிறது. இதனால், ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நாளை முதல் இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் குணமடைய வேண்டி திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் நேற்று 12வது கட்டமாக சுந்தரகாண்ட பாராயணம் படிக்கப்பட்டது. …

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றுடன் இலவச தரிசனம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Tirupati Ethumalayan Temple ,Tirumalai ,Tirupati ,Ethumalayan ,temple ,Devasthanam ,Tirupati Etemalayan Temple ,
× RELATED திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை