குல்பூஷனுடன் இன்று இந்திய அதிகாரிகள் சந்திப்பு

இஸ்லாமாபாத்:  இந்திய கடற்படை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷன் ஜாதவ். பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற இவரை இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக கூறி, அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், அவருக்கு கடந்த 2018ல் மரண தண்டனை விதித்தது, அவரை விடுதலை செய்யக்கோரி இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் முறையிட்டது. இதற்கு செவிசாய்க்காததால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மரண தண்டைனையை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாதவை சந்தித்துப் பேச, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் இன்று ஜாதவை சிறையில் சந்திக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Tags : Indian, officials, meet, today, Gulbhushan
× RELATED தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123...