×

தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தி நாசப்படுத்தி விட்டனர்: டி.ராஜா குற்றச்சாட்டு

சென்னை: வேலூர் மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக சென்னை பாலன் இல்லத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

மிகப் பெரிய பொறுப்பை கட்சி எனக்கு வழங்கி உள்ளது. அதை வெற்றிகரமாக செய்ய வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து நானும், மூத்த தலைவர் நல்லகண்ணுவும் பிரசாரம் செய்ய உள்ளோம். எனக்கு கிடைக்கிற தகவல்கள்படி வேலூர் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும், கேள்வி ேகட்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த சட்டம். அதை மோடி அரசு நிலைகுலைத்துவிட்டது, நாசப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த சட்ட நகல்களும் நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுவதில்லை. பாஜவுக்கு அதிக உறுப்பினர்கள் இருப்பதால் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினாலும் கேட்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Information, right, law, amendment, sabotage
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...