×

தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் அவசர கதியில் அறிமுகம் செய்ததால் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்தது

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) முதல் முறையாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜி முதல் முறையாக ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜிஎஸ்டியை அமல்படுத்தும் முன்பு, அதற்கு போதிய  முன்னேற்பாடுகளை செய்யவில்லை, இதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதுடன் அரசுக்கும் வரி வருவாய் குறைந்துள்ளது என்று அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், வரி வசூலில் முக்கிய காரணியான ‘இன்வாய்ஸ் மேட்சிங் சிஸ்டம்’ முறையை இதுவரையில் சரி செய்ய முடியவில்லை. மேலும், ஜிஎஸ்டி வரி கட்டியதற்கான கணக்கு தாக்கல் செய்வது மாதந்தோறும் குறைந்துவருகிறது. வருவாயை மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதிலும் இதுவரையில் முறையான விதிமுறைகள், வழிகாட்டி  நெறிமுகலைகள் மத்திய அரசு பின்பற்றவில்லை. இன்புட் வரி கிரெடிட் முறையில் பிரச்னைகள் தொடர்கின்றன. ஜிஎஸ்டி அமல்படுத்தி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில்கூட இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாமல் நீடிக்கிறது என்பதை சிஏஜி தனது அறிக்கையில் கடுமையாக குறைகூறியுள்ளது.

மத்திய அரசு கடந்த 2017-18ல் ஜிஎஸ்டி வசூல் மூலம் சேரும் வருவாயை மாநிலங்களுக்கு முறையாக பிரித்து வழங்க விதிமுறைகளை வகுத்தது. அதேபோல், ஜிஎஸ்டி அமலால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய நிதி கமிஷன் பார்முலாவை பின்பற்ற வேண்டும். ஆனால், இந்திய அரசியமலைப்பு சட்டம் மற்றும் ஐஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றின்படி செயல்படவில்லை என்பதையும் குறைகூறியுள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் மறைமுக வரி வருவாய் 21.33 சதவீதமாக குறைந்தது. இதை ஒ்ப்பிடுகையில் கடந்த 2017-18ம் ஆண்டில் மறைமுக வரி வருவாய் குறைவதில் ஏற்பட்ட முன்னேற்றம் 5.8% ஆகதான் இருந்தது.சரக்கு மற்றும் சேவைகள் வரி வருவாய் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி கட்டியதற்கான கணக்கு தாக்கலும் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்காமல் மாதந்தோறும் குறைந்து வருகிறது. இந்த குறையும் இதுவரையில் சரி செய்யப்படவில்லை என்று சிஏஜி கூறியுள்ளது. கணக்கு தாக்கலுக்கான பல்வேறு ஆவணங்கள் தொடர்பான குறைகளும் இதுவரையில் சரி செய்யப்படவில்லை. குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்காது என்பதையும் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.

* ஜிஎஸ்டி மூலம் வசூலான வருவாயை மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்கான விதிமுறைகளை இதுவரையில் மத்திய அரசு சரியாக பயன்படுத்தவில்லை.
* ஜிஎஸ்டி வரி கட்டியதற்கான கணக்கு தாக்கலும் மாதந்தோறும் குறைந்து வருகிறது. இதுவும் சரி செய்யப்படவில்லை.

Tags : GST tax revenues decreased
× RELATED ஜெயங்கொண்டம் அருகே தான் உயிருடன்...