×

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் : ஆய்வில் எச்சரிக்கை!!

சென்னை : சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா என்னும் தீவில் இருந்து தான் இந்தியாவின் அனைத்து ராக்கெட்டுகளும் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த தீவில் கடந்த சில மாதங்களில் சுமார் 200 முதல் 300 மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இதற்கு காரணம் சென்னையில் உள்ள துறைமுகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்முறிவு எனப்படும் கட்டுமானங்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்த கடல் அரிப்பை தேசிய, மத்திய கடற்கரை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அதானி வசம் உள்ள சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை எந்த காரணத்தை கொண்டும் விரிவுப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சுற்றுசூழல் துறை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தமும் கடல் அரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு செயற்கை கடற்கரை அல்லது துறைமுகம் அமைக்கப்படும் போது, தெற்கு பகுதியில் மணல் குவிந்து வடக்கு பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் என்பது சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மெரினா கடற்கரை நிர்மாணம் செய்யப்பட்ட போது. திருவொற்றியூரில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் புகுந்ததையும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கிராமம் ஒன்று அழிந்ததையும்  சுற்றுசூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். …

The post காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் : ஆய்வில் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Kattupally port ,Chennai ,India ,Chennai Kattupalli port ,Kattupalli port ,
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...