காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி

கட்டாக்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்திய நட்சத்திரம் அசந்தா சரத் கமல் போராடி தோற்ற்றார்.கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சக இந்திய வீரர் குரோவர் சுதான்ஷுவை வீழ்த்திய சரத் கமல், கால் இறுதியில் சிங்கப்பூரின் பாங் யு என் கோனுடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பாங் யு என் 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் களமிறங்கிய இந்தியாவின் ஜி.சத்யன் - அர்ச்சனா காமத் ஜோடி 3-0 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் பாங் யு என் - கோய் ருயி ஜுவான் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. ஏற்கனவே ஆண்கள் மற்றும் மகளிர் குழு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்த இந்தியாவுக்கு நடப்பு தொடரில் இது 3வது தங்கமாக அமைந்தது.

Tags : Commonwealth ,Table Tennis,quarter
× RELATED டேபிள் டென்னிஸ்: சித்கரா சாம்பியன்