×

இடியும் நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி-அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு :  அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் அடுத்த செம்பேடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மந்தைவெளி பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் அந்த தொட்டி பழுதடைந்ததால், அதன் அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள இந்த பாழடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழே மினி டேங்க், அங்கன்வாடி மையம் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளது. மேலும் முற்றிலும் தூண்கள் உடைந்து உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, எந்த நேரத்திலும் விழுந்து பேராபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்றிட ஊராட்சி நிர்வாகம் மற்றும் பிடிஓக்களிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  மேலும், அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை அறியாமல் பழுதடைந்துள்ள நீர்தேக்க தொட்டியின் அருகே விளையாடுகின்றனர். இதனால், பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post இடியும் நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி-அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sembedu ,Usur ,Damkatu taluka Vellore ,Dinakaran ,
× RELATED சிவநாதபுரம்-அத்தியூர் வரை புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற தார் சாலை