×

அஞ்சல் துறை போட்டித்தேர்வு தமிழில் நடத்தப்படும் : ஸ்டாலின் வரவேற்பு

சென்னை : அஞ்சல் துறை போட்டித்தேர்வு தமிழில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ம் தேதி நடத்திய தேர்வினை ரத்து செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது என்றும் தமிழில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது என்ற சுற்றறிக்கை வெளியானவுடன் திமுக சார்பில் மக்களவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும்  திமுக வெற்றி பெற்று என்ன சாதிக்கபோகிறது என்று வீண்வாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்த வெற்றி வாய்ப்பூட்டு போடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Postal Department, Competition, Tamil, Conducted, Stalin, Welcome
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்