×

என்ஐஏ சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: நாட்டு நலனுக்கானது என மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: என்ஐஏ சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்தை ஒழிக்கவே என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் என்ஐஏ சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இது நாட்டு நலனுக்கானது என மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. மும்பையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் பலியாயினர். இதையடுத்து தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்படுத்தப்பட்டது. இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் என்ஐஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடக்கும்போது, என்ஐஏ சட்ட திருத்த மசோதா பற்றி விவாதிக்க அரசு முடிவு செய்தது ஏன் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதையும் மீறி இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார். என்ஐஏ சட்ட திருத்த மசோதா குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி பேசியதாவது:தீவிரவாதத்துக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் உள்ளன.

இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்களை குறிவைத்து நடத்தப்படும் தீவிரவாத வழக்குகளை விசாரிக்க என்ஐஏ சட்ட திருத்த மசோதா அனுமதிக்கும். மேலும், ஆயுதம், மனித கடத்தல் வழக்குகள், சைபர் தீவிரவாதம் போன்ற வழக்குகளை விசாரிக்கவும் என்ஐஏவுக்கு அதிகாரம் அளிக்கும். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க விரும்புகிறோம். நாட்டு நலனுக்காத்தான் இந்த சட்ட திருத்த மசோதவை கொண்டு வருகிறோம். என்ஐஏ மிகச் சிறப்பான பணியை செய்துவருகிறது. இதுவரை 272 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. இவற்றில் 52 வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. என்ஐஏ வழக்குகளில் 90 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. எனவே இதை நிறைவேற்ற வேண்டும் என்றார். அதன்பின் என்ஐஏ சட்ட திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற முயற்சி
என்ஐஏ சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி மனீஷ் திவாரி பேசியதாவது: அரசியல் காரணங்களுக்காக விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இவர்களிடமிருந்து ஊடகங்களுக்கு வெளியாகும் தகவல்கள், ‘குற்றம் நிருபிக்கப்படும்வரை ஒருவர் அப்பாவிதான்’ என்ற பழமொழியை மாற்றிவிடுகிறது. நமது அரசியல் சாசனப்படி, என்ஐஏ சட்டம் செல்லுமா? என்பது குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. அதற்குள் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்தியர்களை கட்டுப்படுத்தவே, பல கிரிமினல் சட்டங்களை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததாக நம் முன்னோர்கள் கருதினர். அதனால் மக்கள் சுதந்திரத்துக்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். அரசியல் பழிவாங்கும் செயலுக்கு விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த சட்டத்திலேயே அடிப்படை பிரச்னை உள்ளது. இதற்கு மேலும் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்தியாவை ‘போலீஸ் ராஜ்ஜியமாக’ மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.

அரசு தவறாக பயன்படுத்தாது விவாதத்தில் பேசிய பா.ஜ எம்.பி சத்யபால் சிங், ‘‘ஒரு வழக்கில், விசாரணையை மாற்றும்படி ஐதராபாத் போலீஸ் கமிஷனரிடம், அங்குள்ள அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இல்லை என்றால் அவர் மாற்றப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்’’ என்றார். இதனால் ஆவேசம் அடைந்த ஐதராபாத் எம்.பி ஒவைசி, ‘‘இதற்கான ஆதாரத்தை அவையில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது, ஆளும் கட்சியினர் இடையூறு செய்வது இல்லை. அதுபோல் மற்றவர்கள் கருத்து தெரிவிக்கும்போது எதிர்க்கட்சியினர் பொறுமையாக இருக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து பேசிய ஒவைசி, ‘‘என்னை சுட்டிக்காட்டி பேச வேண்டாம். என்னை பயமுறுத்த முடியாது’’ என்றார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, ‘‘நான் உங்களை பயமுறுத்த முயற்சிக்கவில்லை. மற்றவர்கள் பேசும்போது பொறுமையாக இருங்கள் என்றுதான் கூறினேன். உங்கள் மனதில் பயம் இருந்தால், நான் என்ன செய்ய முடியும்?’’ என்றார்.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஒரு சில எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, ‘‘அரசின் நோக்கம் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவதுதான். இதில் நடவடிக்கை எடுக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மதத்தை நாங்கள் பார்க்க மாட்டோம். ஒரு குறிப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக, என்ஐஏ சட்டத்தை பயன்படுத்துவது மோடி அரசின் நோக்கம் அல்ல. இந்த சட்டம் ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படாது’’ என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சபாநாயகர் தங்கள் ராஜினாமாவை அங்கீகரிக்காமல் தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டி, தங்கள் ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடந்து, அடுத்த விசாரணை ஜூலை 16ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனிடையில் ராஜினாமா கொடுத்துள்ள ஆர்.ரோஷன்பெய்க், ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ், டாக்டர் கே.சுதாகர், முனிரத்னம் ஆகியோர் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.
அதில் நாங்கள் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளதால், எங்கள் ராஜினாமாவை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்நிலையில் நேற்று நீதிமன்றம் கூடியதும், 5 எம்எல்ஏக்கள் சார்பில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்கு மூத்த வக்கீல் முகில் ரோத்தகி கொண்டு சென்றார். 5 பேரின் மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுக்களை ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள 10 எம்எல்ஏ.க்களின் மனுக்களுடன் இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Tags : NIA,Law Amendment,passed, Lok Sabha
× RELATED கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மது சாமிக்கு கொரோனா தொற்று உறுதி