×

பல்லடுக்கு வாகனநிறுத்தத்துக்காக தோண்டும்போது பாதாளச் சிறை தூண்கள் கண்டுபிடிப்பு

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.40 கோடியில் உருவாகும் பல்லடுக்கு வாகன நிறுத்தப்பணிக்காக பளளம் தோண்டும் போது, ராணி மங்கம்மாள் காலத்து பாதாளச் சிறைச்சாலை தூண்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட புராதனச் சிறப்பு மிகுந்தது. வானுயர்ந்த 4 ராஜகோபுரங்களுடன் 14 கோபுரங்கள் கம்பீர தோற்றத்தில் இங்கு உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தற்போது கோயில் அருகே ரூ.40 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது. பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்காக 4 மீட்டர் ஆழத்தில் பூமியை தோண்டி, அதே அளவு உயரத்திற்கு 2 அண்டர் கிரவுண்ட் (கீழ் தளம்) உருவாக்க திட்டம் தயாராகி வருகிறது.

முதல் அண்டர் கிரவுண்ட் தளத்தில் 489 நான்கு சக்கர வாகனங்கள், 2வது அண்டர் கிரவுண்ட் தளத்தில் 6,377 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட உள்ளது. பள்ளம் தோண்டுவதற்கு இடையூறாக இருந்த நீண்ட சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனால் உருவான கட்டிட கழிவுகள் லாரிகள் மூலம் வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று கொட்டப்பட்டது. பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நேற்றும் நடந்தது. அப்போது பத்து அடி நீளமுள்ள கருங்கல் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாதாளச் சிறையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் பார்க்கிங் அமையும் மேற்குப் பகுதியில் ராணிமங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை இருந்தது. இதையடுத்து தொல்லியல் துறையினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இங்கு வந்து கற்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Prison pillars, discovery
× RELATED மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான்...