×

ஆறே கால் அடி நீளம், 4 கிலோ எடை குமரியில் அதிசய மரச்சீனி கிழங்கு

குலசேகரம்: குலசேகரம் அருகே முதலாரில் கட்டிட ஒப்பந்ததாரராக இருப்பவர் ராஜசேகர். 44 சென்ட் பரப்பளவுள்ள ரப்பர் தோட்டத்தில் ஊடுபயிராக மரச்சீனி பயிரிட்டுள்ளார். நேற்று தோட்டத்தில் கிழங்கை பிடுங்குவதற்காக முதலில்  மரச்சீனிக்கம்பில் உள்ள இலைகளை அகற்றினார். பின்னர் ஒரு கம்பை பிடுங்க முயற்சித்தார். அப்போது மண்ணின் மேல் பகுதியில் கிழங்கு ஒன்று நீளமாக இருப்பது தெரிய வந்தது. கிழங்கு பாதிக்காத வகையில் கம்பு கொண்டு மேல் மண்ணை அகற்றி கிழங்கை எடுத்துப்பார்த்தார். அது மிகவும் பெரியதாகத் தெரிந்தது. ஆறே கால் அடி நீளம் இருந்தது. கிழங்கின் கீழ்ப்பகுதி 15 அங்குலம் உடையதாகவும், 4 கிலோ எடை கொண்டதாகவும்  இருந்தது.  வழக்கமாக மரச்சீனி கம்பின் மூட்டுப்பகுதியில் 7 முதல் 10 கிலோ எடையில் நான்கைந்து கிழங்குகள் இருக்கும். ஆனால் ராஜசேகரின் தோட்டத்து மரச்சீனியில் 4 கிலோ எடையில் ஆறேகால் அடி நீளத்தில் ஒரு பெரிய கிழங்கும், வேறு 4 சராசரி எடைகொண்ட கிழங்குகளும் இருந்துள்ளது. அதிசய கிழங்கை கவனமாக எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் பத்திரமாக ராஜசேகர் வைத்துள்ளார். இதை அறிந்த பலரும்  அவரது வீட்டுக்குச்சென்று பிரமாண்ட கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்….

The post ஆறே கால் அடி நீளம், 4 கிலோ எடை குமரியில் அதிசய மரச்சீனி கிழங்கு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kulasekaram ,Rajasekhar ,Mudalar ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளிக்க தடை...