கோவை: கோவை தடாகம் அருகே கூட்டாஞ்சோறு ஆக்கியபோது மஞ்சள்தூள் என நினைத்து சாணிப்பவுடரை கலந்து சாப்பிட ஆறு குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றன. தடாகம் அருகே திருவள்ளுவர் நகரில் 6 சிறார்கள் குடியிருப்புக்கு அருகே கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆக்கிய உணவை உண்டபோது கசப்பாக இருக்கவே பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் விசாரித்தபோது மஞ்சள் தூளுக்கு பதில் சாணிப்பவுடரை எடுத்து சென்று கலந்திருப்பத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 6 பெரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. சிகிசசைக்கு பின்னர் தபோது குழந்தைகள் நலனுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசல் தெளிக்க பயன்படுத்தப்படும் சாணிப்பவுடரில் உயிரைக்குடிக்கும் ரசாயனங்கள் பல உள்ளன. இதை உண்டு பலர் தற்கொலை செய்துக்கொள்வதால் சாணிப்பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டள்ளது. தடையையும் மீறி கோவையில் சில கடைகளில் சாணிப்பவுடர் விற்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. சாணிப்பவுடரை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழும் அதே வேளையில் வீடுகளில் சாணிப்பவுடரை வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
