×

பிபா மகளிர் உலககோப்பை கால்பந்து 3வது இடம் பிடித்தது ஸ்வீடன்

பிரான்சில் நடைபெற்ற பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் 3வது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஸ்வீடன் அணி 2-1 என்ற கோல்  கணக்கில் போராடி வென்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் கொசோவேர் அஸ்லானி 11வது நிமிடத்திலும், சோபியா ஜேக்கப்சன் 22வது நிமிடத்திலும் அபாரமாக கோல் அடித்தனர். இங்கிலாந்து வீராங்கனை பிரான் கிர்பி 31வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். ஸ்வீடனின் சோபியா (இடது) சக வீராங்கனைகளுடன் கோல் அடித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்.



Tags : FIFA Women's, World Cup ,Football,Sweden
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...