×

யாழ்ப்பாணம் பல்கலை.யில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு.: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இலங்கை அரசின் இந்த செயலுக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நிதி கிடைக்க போராடும் நிலையில், இனவெறியனரின் இந்த செயல் தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்துவதாக கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளார்.  ஈழத்தமிழர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்துக்குள் சிங்கள அரசு இந்த அராஜகத்தை செய்துள்ளதாக வைகோ புகார் தெரிவித்துள்ளார். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிவான செயல் மிகவும் கண்டிக்க தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வாழ் உரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். …

The post யாழ்ப்பாணம் பல்கலை.யில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு.: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mullivaikal ,Memorial Yard ,Jaffna University ,Chennai ,Chief Minister ,Edappadi Palaniswami ,Jaffna ,University ,Sri Lanka ,
× RELATED பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சீமான் ஆஜர்