×

மேற்கு வங்கம் பெயரை மாற்ற இன்னும் ஒப்புதல் தரவில்லை: மாநிலங்களவையில் விளக்கம்

புதுடெல்லி: ‘‘மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்ளா’ என மாற்றுவதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை,’’ என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஜூலை 26ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்ளா’ என மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ரிதப்பிரதா பானர்ஜி நேற்று கேள்வி எழுப்பினார். ‘பங்ளா என பெயர் மாற்றம் செய்யும் மேற்கு வங்க அரசின் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா?’ என அவர் கேட்டார்.

இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்து மூலமாக அளித்த பதில் வருமாறு:2016ம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’, பெங்காலியில் ‘பங்ளா’, இந்தியில் ‘பங்கள்’ என குறிப்பிட வேண்டும் என்று முன்மொழிந்தது. இதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த ஜூலையில் ‘பங்ளா’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.  முதல்வர் மம்தா பானர்ஜி அரசால் முன்மொழியப்பட்ட இந்த பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அது தொடர்பான அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பிறகே அதை நிறைவேற்ற இயலும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : West Bengal , not , approved,name change
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்