×

கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியங்களில் சம்பா சாகுபடி அறுவடை நடைபெற்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை விற்பனை செய்வதற்கு அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பல்வேறு இடங்களில் திறந்துள்ளது. விவசாயிகள் நெல் மணிகளை கொள்முதல் செய்தனர். சுமார் 3 மாதங்களுக்கு மேலாக கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சாக்கு மற்றும் சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்யாமல் இருந்த நிலையில் பின்னர் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து நெல் மணிகளை நெல் கிடங்கிற்கு கொண்டு செல்ல தாமதம் செய்து வருகின்றனர். சென்ற ஆண்டு இப்பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாததால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. சென்ற ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தொடர் மழையில் சிக்கியதால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையங்களிலேயே மூட்டைகளில் முளைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படாத நிலையிலும் கொட்டிக்கிடந்த நெல் மணிகள் முளைத்து கிடைந்தது குறிப்பிடத்தக்கது.அதே நிலை இந்த ஆண்டும் தொடர்ந்து வருகிறது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல் ஏற்றுமதி செய்யப் படாத நிலை நீடித்து வருகிறது. தற்போது தா.பழூர் சுற்றி உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தாம்பாடி திருபுரந்தான், கோவிந்த புத்தூர், காரைக்குறிச்சி, தா.பழூர், இடங்கண்ணி, கோடாலிகருப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் சுமார் 80 சதவீத நெல் மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. விவசாயிகள் சிரமபட்டு விளைவிப்பது சென்ற ஆண்டு கண்முன்னே வீணாகி போனது. மேலும் காட்டு பன்றி, ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் சேதங்களை ஏற்படுத்தி வீணாக்கி விடக்கூடாது. விவசாயிகள் விளைவிக்கும் பொருளை வீணாக்காமல் உடனடியாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Tha.Balur ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டதொழில்நெறி...