×

தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனை ஜோர்: கிலோ ரூ20க்கு விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஒருகிலோ ரூ20 முதல் ரூ25 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முலாம்பழத்தை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து, சந்தைபேட்டையில் குவித்து வைத்தும், தள்ளுவண்டி, சரக்கு வாகனங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மற்ற பழங்களை காட்டிலும், முலாம்பழம் விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தர்மபுரி சந்தையில் ஒருகிலோ முலாம்பழம் ₹20 முதல் ₹25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால், வெப்பத்தை தணிக்க முலாம்பழம் வாங்கி சாப்படுகின்றனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக தர்மபுரிக்கு விற்பனைக்கு வருகிறது. தினசரி 2 டன் முலாம்பழம் விற்பனையாகிறது….

The post தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனை ஜோர்: கிலோ ரூ20க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Melon ,Dharmapuri district ,Jore ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்