×

ஒடசல்பட்டி கூட்ரோட்டில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடத்தூர்: கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு வழியாக அரூர், தர்மபுரி, கடத்தூர், பொம்மிடி, சேலம், ஓமலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வழித்தடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகளும் கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் சரிவர எரியாததால், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடந்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, போக்கு வரத்து சிக்னல் விளக்குகளை சீர் செய்ய வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதில் கொண்டு, சிக்னல் விளக்குகளை சரி செய்ய ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஒடசல்பட்டி கூட்ரோட்டில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Odasalbati Goodrot ,Kadhattur ,Odasalbati Goodroad ,Kadathur ,Odasalpatti Godrot ,Dinakaran ,
× RELATED அதிமுக அணையப்போகும் விளக்கு என...