×

தஞ்சையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை சரபோசி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு எதிராக உள்ளதாகவும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை பல்வேறு மாநிலங்களிலும் ஊக்குவிப்பதற்காக இந்த கொள்கை வந்திருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும், மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வர கூடிய இந்த சூழ்நிலையில், தஞ்சை சரபோசி கல்லூரி மாணவர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் இந்த புதிய கொள்கைக்கு எதிராக தமிழ்மொழியை காக்க வேண்டும். மேலும் இந்தி மொழியையோ அல்லது சமஸ்கிருத மொழியையோ திணிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து  இடஒதுக்கீட்டை பாதுக்காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்காரணத்தினால் கல்லூரி வாயில் முன்பு பரபரப்பு நிலவியது. மேலும் இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி என்பதை மத்திய பட்டியலிலிருந்து மாற்றி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் அரசு பள்ளிகளை காக்க வேண்டும். தனியார் கல்விகளை ஊக்குவிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Asylum, new education policy, protest, students, struggle
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை